பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

120

“ அருளிலார்க் கவ்வுலகம் இல்லை பொருளிலார்க்

கிவ்வுலகம் இல்லாகி யாங்கு ‘ “ என்று பொருளின் இன்றியமையாமையினை கினைவூட்டு கின்றார். மேலும் அவர் அருளும் பொருளால் வளர்வது என்றும். அன்பு பெற்ற அருள் என்னும் குழந்தையைப் பொருள் செவிலித்தாயாக இருந்து வளர்த்தால்தான் வளரும் என்றும் சொல்கிறார். திருவள்ளுவர் முத்தாய்ப் பாக, “நெறியான் வரும் பொருளை இறப்பமிகப் படைக் தார்க்கு மற்றை அறனும் இன்பமும் ஒருங்கே எளிய பொருள்களாம்’ ‘ என்ற கருத்தில்,

“ ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்

ஏனை யிரண்டும் ஒருங்கு ‘ “ என்று கூறுகிறார், இக்கருத்தினையே அறநூலாம் இாலடியாரும்,

வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவண தெய்த விருத லேயு மெய்தும் ‘ “ என்று குறிப்பிடுகிறது. திவ்யப் பிரபந்தத்தில் அமைந்துள்ள சிறிய திருமடலும்,

ஆராயிற் ருனே யறம்பொரு ளின்பமென் ருரா ரிவற்றி ணிடையதனை யெய்துவர் சீரா ரிருதலையு மெய்துவர் ‘ “ என்று குறிப்பிடுகின்றது. சுருங்கச் சொல்லின் ‘வயிறு உள்ள வரையில் பொருள் தேடும் வாழ்க்கை இருந்தே திரும். அரசியலிலிருந்து ஒருவரும் விலக முடியாது.

திருக்குறள் : 247. திருக்குறள் : 757 பரிமேலழகர் உரை. திருக்குறள் : 780.

காலடியார் : 114. 7. சிறிய திருமடல் : 3.4.