பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

121

ஆகையால் வீட்டு வாழ்க்கைக்கு அடிப்படையானது பொருள் நல்கும் நாட்டு வாழ்க்கை யென்பது பெரிய உண்மையாகும்” என்பர்.”8

தொல்காப்பியம் உணர்த்தும் பிரிவுகள் :

பிற்காலத் தெழுந்த அகப்பொருள் இலக்கண நூல்கள் நுவலும் அறுவகைப் பிரிவுகளையும் தொல்காப்பியம் ஒருங்கே ஓரிடத்தில் குறிப்பிடவில்லை. தொல்காப்பியனார் அகத்திணையியலில்,

“ஓதல் பகையே தூது இவை பிரிவே”9

என்று தொடக்கத்தில் கூறிச் சில நூற்பாக்களுக்குப் பின்னர்,

“பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே
  உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான்”10

என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“வேந்துறு தொழிலே யாண்டின தகமே”11

என்று கற்பியலில் பிரிவுக் காலத்தின் எல்லையைக் குறிப்பிட்டு, அடுத்த நூற்பாவில்.

“ஏனைய பிரிவும் அவ்வயின் நிலையும்”12

என்று கூறியுள்ளார். எனவே பொருள்வயிற் பிரிவு ஓராண்டு எல்லைக்குள் அமைவதாகும். களவுக்காலத்து அமையும் பிரிவு ‘வரைவிடை வைத்துப் பொருள் வயிற்பிரிதல்’ என வழங்கும். திருமணத்திற்குரிய பொரு


8. டாக்டர் மு. வரதராசனர் : திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் பக்கம்.81

9. தொல்காப்பியம் : அகத்திணையியல் : 25

10. தொல்காப்பியம் : அகத்திணையியல்: 33

11. தொல்காப்பியம் : கற்பியல்: 48

12. தொல்காப்பியம் : கற்பியல்: 49