பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

125

கலித்தொகை காட்டும் பொருட் பிரிவு :

கற்றறிந்தோர் ஏத்தும் கலியின் ஒரு பிரிவான பாலைக்கலி பொருள்வயிற் பிரிதலைப் பாங்குறக் கிளத்தி யுள்ளது. தலைமகன் பொருள்வயிற் பிரியக் கருதுவது, அறத்தாம் பொருளிட்டி அருளாளர்க்கு அளிக்கவும், பகை வென்று மேம்படவும், காதல் இன்பங் துய்க்கவும் ஆய காரணங்களின் பொருட்டே என்று தலைவி தோழிக்கு மொழிகின்றாள்.

“ அளிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேளுரைத் தெறுதலும் புரிவமர் காதலில் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் பிரிந்தகங் காதலர்.” மேலும், தொலைவாகி யிரந்தோர்க்கொன் மீயாமை யிளிவென'க் கருதியும், இல்லென விரக்தோர்க்கொன் lயாமை யிளிவென'க் கருதியும், ‘இடனின்றி யிரக் தோர்க்கொன் lயாமை யிளிவெனக்’ கருதியும் தலைமகன் பொருள்வயிற் பிரிந்ததாகத் தோழி தலைமகட்குக் கூறுவதாகக் கலித்தொகை” கவினுறக் காட்டும்.

உரையாசிரியர்கள் கூறும் விளக்கம்

இறையனர் களவியல் உரையாசிரியர் பொருள் வயிற். பிரிவுக்குரிய காரணத்தைப் பின்வருமாறு குறிப்பிடுவர்:

“இனி, பொருட்பிணி என்பது பொருளிலய்ைப் பிரியு மென்பதன்று; தன் முதுகுரவாற் படைக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட பொருளெல்லாம் கிடந்துமன்; அதுகொடு

=

25. கலித்தொகை: 14: 1-4 28. கலித்தொகை: 2:11, 15 19