பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

128

பொருள்வயிற் பிரியின் பொருளே பொருளுடையது போலும் எனப் புலம்புகின்றாள்.

“ அத்த மரிய வென்னர் கத்துறந்து

பொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்துப் பொருளே மன்ற பொருளே அருளே மன்ற வாருமில் லதுவே! “

தன் தோழியிடம் பேசும்போதும் தலைமகள்,

“ பொருளே காதலர் காதல்

அருளே மற்று என்றி நீயே ‘ என நெகிழ்ந்து மொழிகின்றாள்.

உரவோரும் மடவோரும் :

“ அருளும் அன்பும் நீங்கித் துணைதுறந்து

பொருள்வயிற் பிரிவோர் உரவோ ராயின்

உரவோர் உரவோர் ஆக மடவம் ஆக மடக்தை நாமே’

என்று தலைமகள் கூறும் கூற்றில்தான் எத்துணைப் பொரு ளாழம், அவலம். சோர்வு, நகை முதலியன நிறைந்து காணப்படுகின்றன!

  • இளமை பாரார் வளாசைஇச் சென்றாேர் இவனும் வாரார் எவணரோவெனத்’ தலைமகனின் பொருள் கசையினைத் தன் இளமையினையும் புறக்கணித்துவிட்ட கடும் கெஞ்சினே ஆற்றாமையோடு: குறுப்பிடுகின்றாள்.

36. குறுந்தொகை: 174: 4-7 37. அகநானூறு: 53 38. குறுந்தொகை: 20 39. குறுந்தொகை: 1.6:1