பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

130

தடுமாறியது. செல்வார் என்று அவள் எண்ணுததும் ஒல்லாள் என்று தலைவன் எண்னததும் இரு பேராண்மைப் பூசலாக கின்று இடர் விளைவித்தன.

“ . . . . . . . . . . . . . . . . . . அருஞ்சுரம்

இறந்துநீர் செய்யும் பொருளினும் யாமுமக்குச் சிறந்தன மாத லறிந்தனி ராயின் ‘’ ‘’

என்று தோழி தலைமகனுக்குக் கூறிச் செலவழுங்க முயற்சி மேற்கொள்கிருள்.

செலவழுங்கல்:

தலைமகனே ஆற்றிவிட்டுப் பிரிய எண்ணும் தலைமகன் தன் செலவினைச் சின்னுள் தள்ளிப் போடுவான். அது போது தலைமகள் மாட்டு மிகுந்த தலையளி செய்வான். ‘ கழிபெரு நல்கல் ஒன்றுடைத்து:” “அழாஅல் என்று நம் அழுதகண் துடைப்பர்:’ ‘கறுநுதல் வுேவர்! கூந்தற் கோதுவர் என்றெல்லாம் தலைமகன் செய்த தலையளியினைப் பாராட்டுவள்.

தலைமகனும்,

“ முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்

வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே ‘ “ என்று தன் கெஞ்சிற்குக் கூறிச் செலவழுங்குவான். ஆயினும் இவ்வாறு செலவழுங்குவது செல்லாமைக் கன்று; அன்பு காட்டித் தலைமகளேத் தெருட்டிப்

43. கலித்தொகை: 5 , 4-5 44. Dr. W. SP. Manickam,; The Tamil Concept of love, page-6 45. கலித்தொகை : 4 : 22

46. குறுந்தொகை : 82 : 2

47. பட்டினப்பாலே : 218.220