இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
132
182
இன்பம் துய்க்கவும் பொருள் பெரிதும் வேண்டம் பாலது என்பதும், பொருள்வயிற் பிரியக் கருதும் தலைமகன் கடமையிற் கருத்துான்றியவன் என்பதும், கடமைக்கும் காதலுக்கு மிடையே ஒரு போராட்டம் நிகழும் என்பதும், தலைமகனைத் தெருட்டிப் பிரியத் தலைமகன் செலவழுங்கினும், பின் சின்னட்கள் கழித்துக் கருதியபடியே கொண்ட கடமையினே மேற்கொண்டு குறைவற முடிப்பன் என்பதும், தலைமகள் தலைமகன்மாட்டுக் கொண்ட எல்லேயில்லாத அன்பு காரணமாக உள்ளம் பேதுறுவள் என்பதும், பின்னர்த் தலைவன் பொருளிட்டிவர ஒருப்படுவள் என்பதும் ஒருவாறு அறியப்பட்டன. பொருள்வயிற் பிரிவு பழக் தமிழர் தம் வாழ்க்கையின் ஒரு கூறினைச் சிறப்பித்து சிற்கக் காணலாம்.