பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10
வற்றிய பாலையில் வற்றாத அன்பு

பழந்தமிழர் சீரான செம்மையான வாழ்வு வாழ்ந்த வர்கள். அவர்களின் அகவாழ்வு அன்பு கிறைந்ததாகவும். புறவாழ்வு புகழ் கிறைந்ததாகவும் விளங்கியதனைச் சங்கப் பாடல்கள் கொண்டு தெளியலாம், விழுமிய குறிக்கோள் கிறைந்த உயரிய வாழ்வாக அவர்கள் வாழ்வு துலங்கியது. காதல் நெஞ்சங்கள் இரண்டு அன்பால் ஈர்க்கப்பட்டுப் பின் குடும்ப வாழ்வில் தலைப்படும் பொழுது இன்பமும் துன்ப மும் வாழ்வில் மாறி மாறி அலைக்கழிக்கும். இதனைப் பழந்தமிழ் மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

“ இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்

கன்பகல் அமையமும் இரவும் போல

வேறு வேறு இயல ஆகி மாறெதிர்ந்து

உளஎன உணர்ந்தனை ஆயின், ‘

இன்பமும் துன்பமும் கூடி வாழ்தலும் பிரிந்து துன்புறுதலும் பகலும் இரவும் போல மாறி மாறி வரும் என்பதனைத் தமிழர்கள் நன்கறிந்திருந்தமையான், இன்பம் வந்த காலேயில் இறுமாந்து விடாமலும் துன்பம் வந்த பொழுது சோர்ந்து விடாமலும் தூய கல்வாழ்வின வாழ்ந்து காட்டினர்கள். அவர்கள் மேற்கொண்ட கொள் கைகள் தூயனவாய் இருந்தன; அவர்கள் வாழ்ந்த வாழ்வும் விழுமியதாய் அமைந்திருந்தது. பிறநாடுகள்

..I. அகநானூறு : 327 : 1-4