பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

134

காகரிகம் பெருத காலத்திலேயே தமிழர்கள் தமக்கென்று தனித்ததொரு தூய நாகரிகத்தினை மேற்கொண்டு ஒழுகி வந்தனர் என்பது வரலாற்றின்வழி நன்கு புல.ை கின்றது.

அகவாழ்வு-விட்டு வாழ்வு அன்பின் அடிப்படையில் முகிழ்த்தாலும், அவ்வாழ்விற்கு அடிப்படைத் தேவையாய் அமைவது பொருளே. இது குறித்துத் திருவள்ளு வருமி,

“ அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு.

இவ்வுலகம் இல்லாகி யாங்கு ‘ என்று பொருத்தமுறப் புகன்றுள்ளார்.

காலம் பல கடந்த கிலேயிலும் பொருளின் தேவை குறைந்ததாகக் காணுேம்; மாருக மிகுவதனையே காண்கி ருேம். சங்க காலத்தில் பொருளின் தேவையைப் பழங் தமிழர் நன்கு உணர்ந்திருந்தனர். ஆயினும் அப்பொருளே அவர்கள் என்னென்ன மேற்கோள்களுக்காக ஈட்டினர் என்பதனை நோக்கும் பொழுதுதான் அவர்கள் வாழ்ந்த விழுமிய வாழ்வு புலனுகின்றது. இன்றைய வாழ்வில் பொரு விட்டல் என்பது, தன் மனைவி மக்கள் சுற்றம் என்பவர் களை ஒம்ப மட்டுமே பயன்படுகின்றது. தன்னல நோக்கு -தான் வளமாக வாழ வகை செய்வதற்குப் பொருள் என்ற அளவில் இன்று பொருளின் தேவை கருதப்படு: கின்றது. ஆனால், அன்று அத்தகைய குறுகிய மனப் பான்மை இல்லை. அன்பும் பண்பும் பாசமும் கேசமும் பின்னிப் பிணைந்து அரசோச்சிய காலம் அது. எனவே தனி மனிதர் வாழ்விலும் சமுதாயத்தின் கூட்டுறவைப் பற்றிய எண்ணம் இலங்கியது. ஒருவர் பொறை இருவர் கட்பு என்ற விலை-விட்டுக் கொடுக்கும் மனப்பான்மைய்ே

2. திருக்குறள் : 247