பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

136

வழி வந்த செல்வமாக இருந்தாலும் அதனைச் செல வழித்தலே இழிவுடையதாகக் கருதினன். அதனையும்விட ‘இல்லை என்று வந்தவர்க்கு இல்லை யென்னது ஈதல் வேண்டும் என்பதும் அவனுடைய உயரிய குறிக்கோளாக

இருந்தது:

‘உள்ளது சிதைப்போர் உளர்.எனப் படாஅர்

இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு. ‘

மேலும், “நண்பரின் வறுமையினையும், சுற்றத்தவரின் துன்பத்தினையும் ஒருபுறம் கண்டு, பகைவரின் மேம்பாட் டினேயும் ஒருபுறம் பார்த்துக் கொண்டே, ஊரில் அமைதியாக வாழ யாரால் முடியும்? வாழ்க்கைத் துணைவி யாகிய மனைவியை விட்டுப் பிரிய முடியாதவர்களால், கடமை உணர்ச்சி குன்றியவர்களால்தான் அது முடியும். கடமையில் மேம்பட்ட என்னல் அது முடியாது. முடியாது என்று கள்ளிரவிலும் பகலிலும் இதனையே திரும்பத் திரும்ப எண்ணி வருந்தினேன், இது ஒரு தீயாய் வளர்ந்து என் வலிமையைச் சுட்டெரித்தது’ என்று சங்க காலத் தலைமகன் கூற்றாக அகநானூற்றுப் பாடல் ஒன்று அமைக் துள்ளது.

கட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும் ஒட்டாது உறையுகர் பெருக்கமும் காணுஉ ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல பொன்னவிர் சுணங்கொடு செறிய வீங்கிய மென்முலை முற்றம் கடவா தோர்என கள்ளென் கங்குலும் பகலும் இயைந்தியைந்து உள்ளம் பொத்திய உரம்சுடு கூர்எரி. ‘'’

4. குறுந்தொகை : 283 : 1.2 5. அகநானுாறு : 279 : 1-7