137
137
அறநெறியைக் கைவிடாது போற்றி ஒழுகுவதும் அன்பின் சிறந்த உறவினர் உற்ற துன்பத்தைத் தாங்கி கிற்றலும், ஊக்கமும் முயற்சியும் இன்றி காளைக் கழிப்ப வர்க்கு:முடியாதனவாகும்! எனவே கடமையைக் கலங்காது ஆற்ற முனைந்த தலைவன் தலைவியை மிக நெருங்கி, “நான் மேற்கொண்டுள்ள இப்பொருளிட்டும் முயற்சி உனக்குத் துயர் விளைவிக்கும் என்பது உண்மைதான். ஆயினும் ே துன்புற்று வருந்துவதைச் சில காலம் எப்படியாவது பொறுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அவளுடைய மெல்லிய கையைப் பற்றிக்கொண்டு சொன்னன். இவ்வாறு சொல்லிக் கொண்டே கை வளையல்களைத் திருத்தின்ை.
‘ அறந்தலைப் பிரியாது ஒழுகலும் சிறந்த கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும் வருந்தா உள்ளமெர்டு இருந்தோர்க்கு இல்லெனச் செய்வினை புரிந்த கெஞ்சினர் நறுநுதல் மையிர் ஓதி அரும்படர் உழத்தல் சின்னுள் தாங்கள் வேண்டும் என்றுகின் கன்மாண் எல்வளை திருத்தினர்.’ “ இவ்வாறுபழங்காலத்தில் தலைவன் மேற்கொண்ட பொருளிட்டும் முயற்சி தன் வாழ்வின் நலத்திற்கே என்பது மட்டுமேயன்றிப் பிறர் நலத்திற்கு உதவ வேண்டும் என்பதும் பற்றி கின்றது எனத் தெளியலாம். உறவினரும் கண்பரும் இரவலரும் வறுமையில் உழலாமல் வளமாக வாழவேண்டும் என்பதிலே தலைவனின் கருத்துத் திளைத் திருந்தது.
“ ஏதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி.’ “
---
6. அகதானுாறு : 173 : 1.7 7. குறுந்தொகை : 63 : 1.2