பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

138

ஆயினும் தலைவியை விடுத்துத் தனிமையோடு சென்று: துயர் கூர்ந்து பொருளிட்டித் திரும்பும் கிலேயில் அவன் உற்ற துயர் பெரிது; உழன்ற துன்பம் மிகுதி. அவன் செல்ல வேண்டிய கொடிய பாலை வழியினும் தன் ஆருயிர்த் துணைவியை விட்டுச் செல்வதில் அவன் அடைந்த துன்பம் சொல்லொனதது.

“கொடிய காட்டு வழியில் கிளை விட்டுப் படர்ந்துள்ள கவர்த்த வழிகளை நம்பி வழிப்போக்கர்களைக்கொள்ளையடித்து. வாழ்ததைத் தவிர, மழை வளத்தை எதிர்பார்த்து வாழாத. ஆறலே கள்வர்கள் அங்கே பலர் வாழ்கின்றார்களாம். அவ்வாறு வாழ்ந்தாலும் என்ன? ஓங்கி உயர்ந்து வாழ்க் துள்ள யா மரத்தின் உயர்ந்த கிளையில் உள்ள தன் குஞ்சு களுக்குத் தாய்க் கழுகு உணவு தேடி எடுத்துச் செல்லுமாம். அக் கழுகு போரில் மாண்ட வீரரின் கண் தசையை எடுத்துச் சென்று தன் குஞ்சுகளுக்கு ஊட்டுங் காலேயில் தசை வழுக்கிக் குஞ்சுகளின் வாய் தவறிக் கீழே விழுமாம். அப்பொழுது அவ் யா மரத்தின் அடியில் மிகுந்த பசியால் ாலிந்து வாடி வருந்தும் கிழ நரி கீழே விழும் அத் தசையினே உணவாகக் கொண்டு மகிழுமாம். அத்தன்மை வாய்ந்த கொடிய பாலை வழியும் நமக்கு எளிய வழிதான். ஆயினும் மென்மையும் இனிய மொழியும் புன்முறுவலும் கொண்ட இளமை கிறைந்த என் துணைவியைப் பிரிந்து செல்வதுதான் அருமையான செயலாக இருக்கிறது” என்று தலைவன் பொருள் வலித்த தன் நெஞ்சிற்குச் சொல்லி வருந்தியதாக மதுரை மருதன் இளநாகனர் பாடியுள்ளார்:

“ கானுயர் மருங்கில் கவலை அல்லது

வானம் வேண்டா வில்லேர் உழவர் கெடுகாள் வேட்டம் கிளைஎழ வாய்த்த