பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

140

காணுமையால் வருந்துகின்றது. பின்னர் அங்கே உலர்ந்து கிடக்கும் பrசியைத் தின்று, அயர்வு தரும் பசித் துன்பக் துடன் வருத்த மிகுந்திருக்கும் பெண் யானையுடன் ஒரு சிறை ஒடுங்கிக் கிடக்கின்றது. மூங்கில்களின் கணுக்கள் முறிந்து போகும் வண்ணம் அந்தப் பாலை விலத்தில் வெயிலின் வெம்மை மிகுந்துள்ளது.

‘ அருவி ஆன்ற பெருவரை மருங்கில்

சூர்ச்சுனை துழை.இ நீர்ப்பயம் காணுது பாசி தின்ற பைங்கண் யானை ஒய்பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க வேய்கண் உடைந்த வெயிலவிர் கனத்தலை,’ “

வளம் வற்றிய பாலையிலும் வற்றாத அன்பு வாழ்வு வாழ்கின்றன. அப்பாலையில் வாழும் யானே, புலி, குரங்கு. பருந்து, பல்லி, புரு மான் முதலிய உயிரினங்கள் என்பதனைப் ப ழ ங் த மி ழ் இலக்கியங்கள் கொண்டு தெளியலாம்.

கொடிய பாலகிலத்தில் உண்ண உணவு கிடைக்காமல் யானைக் குடும்பம் ஒன்று பெருந்துயர் உழக்கின்றது. பெண் யானையின் மிகுபசியைப் போக்க ஆண் யானே முயல்கின்றது. அவை ஆர்வமாகச் சுவைக்கும் தழை யுணவோ, மூங்கிலோ கிடைக்காத காரணத்தால் யா மரத்தின் மென்மையான கிகளயை யொடித்து அதன்மேற் பட்டையை உரித்துத் தன் பெண் யானே தின்னுமாறு தந்து மகிழ்கின்றது.

‘ பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழி அவர் சென்ற ஆறே.’ !

10. அகநானூறு : 91 : 3-7 11. குறுந்தொகை : 37 : 2.4