பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

142

மூன்றுடன் ஈன்ற முடங்கர் கிழத்த துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தெனப் பொரிகிளர் உழுவைப் பேழ்வாய் ஏற்றை அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஒர்க்கும். ‘ நிழலும் ருேம் அற்ற கொடிய பாலே வழியில் ஓங்கி வளர்ந்த மரம் ஒன்று இனிய கனிகளைக் கொண்டு கின்றது. குட்டியை ஈன்ற மந்தி அக்கனிகளை உண்ண வேட்கை கொண்டது. ஆயினும் மரம் ஏறிக் கனிகளைப் பறித் துண்ணும் ஆற்றல் இன்றி மரத்தின் கீழே கின்று உயரே அங்காந்து பார்த்து ஏங்கியது. மந்தியின் விருப்பத்தை உணர்ந்த ஆண் குரங்கு விரைந்து மரத்தின் மீது ஏறிக் கிளைகளை அசைத்துக் கனிகளே உதிர்க்கத் தொடங்கியது. மரத்தடியில் ஆவலோடு அமர்ந்திருந்த மந்தி கீழே உதிர்ந்த கனிகளில் சிறந்தனவற்றைத் தேர்ந்தெடுத்து உண்டது.

ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந்து ஏற்பன ஏற்பன உண்ணும் பார்ப்புடை மந்திய மலையிறங் தோரே. ‘

- காதல் நெஞ்சங் கொண்ட அன்பான பருந்துகள் இரண்டு பாலே கிலத்திலே வாழ்ந்து வந்தன. அந்தப் பாலை கிலத்திலே பயணம் செய்யும் வழிப்போக்கரை வழி மறித்துக் கொள்ளையிட்டு அவர் பொருள் கைக்கொண்டு கொடுமை வாழ்வு கடத்தும் ஆறலை கள்வர்கள் அங்கு நிறைந்துள்ளனர். அவர்கள் இரக்க மின்றிக் கொன்று குவிக்கும் பிணங்கள் பருந்துகளுக்கு விருந்தாகின்றன. கொடிய செயலால் மாண்டுபோன மாண்புடையோரின் பிணங்களைப் பருந்துகள் உண்ணும் நிலையிலும் அவைகளின்

12. அகநானூறு : 147 : 2.7 13. குறுந்தொகை : 278 : 5-7