இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
146
146
“ இன்னிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்னிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும்
உரைத்தனரே’ ‘ என்று மாண்பு நிறைந்த மான் குடும்பத்தின் மலர்ச்சி வாழ்வினையும் கலித்தொகை .ெ க ா ண் டு நன்கு தெளியலாம்,
இதுகாறும் கூறப்பெற்றவற்றால் பொருளின் இன்றி யமையாமையினையும் பொருள் ஈட்டுவதன் கோக்கத் தினையும், வற்றி வளஞ் சுருங்கிய கொடிய பாலையின் தன்மையினேயும், வளம் வற்றிய பாலையிலும் வற்றாத அன்புள்ளம் கொண்டு இன்புடனும் மனநிறைவுடனும் வாழும் யானை, புலி, குரங்கு. பருந்து, பல்லி, புரு, மான் முதலிய உயிரினங்களின் வாழ்க்கையினையும் ஒருவாறு தெளிந்தோம்.
“ அன்பின் வழியது உயிர்நிலை. ‘
21. பா8லக்கலி; 11 : 16-17 22. திருக்குறள் : 80