11 மடலேறுதல்
தொல்காப்பியனர் பழந்தமிழர் தம் வாழ்வு விலையினைப் பொருளதிகாரத்தில் கூறிப் போக்தார். நாடக வழக்கம், புலனெறி வழக்கம் என்று அவர் இரு வழக்கத்தினைச் சுட்டிக் காட்டியுள்ளார்: சங்க இலக்கியப் பாடல்களைப் படிக்கின்றபொழுது தெகல்காப்பியனர் கருத்து நன்கு விளக்கமுறுகின்றது. அக்காலத்து ஒழுகலாறுகளாகத் தொல்காப்பியனர் தம் இலக்கணத்தில் கூறிப்போங்க பல செய்திகள் சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. “இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்’ என்ற மரபுக் கிணங்க, இலக்கணத்தை லிளக்குவன போன்று இலக்கியச் செய்திகள் இடம் பெற்றுள்ள சிறப்பினைச் சங்க இலக்கியத்தில் காண்கிருேம்.
தொல்காப்பியனர் அகத்திணையியலில்,
“ எறிய மடற்றிற மிளமை தீர்திறங்
தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மடலொடு தொகைஇச் செப்பிய கான்கும் பெருந்திணைக் குறிப்பே’ “
என்றாெரு நூற்பாவினைத் தந்துள்ளார். இந்நூற்பா பெருந்திணை இலக்கணம் கூறுகின்றது. இதில் மடலேறுதல் பெருக்திணைக்குரிய செய்தி என்பது புலகிைறது. ஆயினும் களவியலில் மெய் தொட்டுப் பயிறல்’ என்ற அாற்பாவில், மடன்மா கூறும் இடனுமா ருண்டே’
1. தொல். அகத்திணையியல் : -51