பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1



தமிழகத்தின் தொன்மை

உலகம் தோன்றிப் பன்னெடுங்காலம் கழிந்துவிட்டது. முதற்கண் உலகம் தோன்றிய காலத்தில் தீக்குழம்பாக இருந்த மண் முதலில் குளிர்ந்து அமைந்த நிலப்பகுதி தென்னகமே என்றும், உலகில் முதற்கண் தோன்றிய மக்களினம் இத்தென்னகத்தில்தான் வாழ்ந்திருத்தல் வேண்டும் என்றும் புவி இயல் ஆராய்ச்சியாளர் பலரும் கருதுகின்றனர். வட இந்தியாவில் கங்கைச் சமவெளியில் மனித வாழ்வு தொடங்காத காலத்திலேயே, இப்போது இந்தியப் பெருங்கடல் உள்ள பகுதியில் பரந்த நிலமும், மலையும், ஆறும் இருந்து, பிறகு கடல்கோளால் மறைந்தழிந்தன என்றும் கூறுவர். இந்தப் பெரிய நிலப்பரப்பு. கிழக்கே பர்மா தொடங்கித் தெற்கே சீன வரையிலும், மேற்கே ஆப்பிரிக்காவின் கிழக்குத் தெற்குக் கரைகள் வரையிலும், வடக்கே விந்திய மலை வரையிலும் தெற்கே. ஆஸ்திரேலியா வரையிலும் பரந்திருந்தது. இந் நிலப் பரப்பினை ஆங்கிலேயர் லெமூரியா (Lemuria) என்று


1. There is geological evidence to prove that in very early time. South India formed part of a huge continent which extended from, Burma and South China in the East, South Africa on the west, Vindhya Hills on the north and Australia on the South.

—Rig Vedic India,p.91.