பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

148

என்று ஒரு குறிப்பினையும் பெற வைத்துள்ளார். இதற்கு விளக்கமாக, இது மேல் இயற்கைப் புணர்ச்சிப் பகுதி யெல்லாங் கூறி அதன்வழித் தோன்றும் இடங்தலைப் பாடும், அதன்வழித் தோன்றும் பாங்கற் கூட்டமும், அவற்றுவழித் தோன்றுக் தோழியிற் கூட்டமும் நிகழு. மிடத்துத் தலைவன் கூற்று கிகழ்த்துமாறும், ஆற்றாமை கையிகந்து கலங்கியவழி அவன் மடன்மா கூறுமாறும் கூறுகின்றது என்ற விளக்கம். நாற்பாவின் கீழ்க் க்ாணப்படுகின்றது. ‘தோழி தலைவனைக் காவலர் கடுகுவரெனக் கூறிச் சேட்பட சிறுத்தலிற் தலைவன் தனக்கு உண்டாகிய வருத்தத்தைப் பார்த்து அச்சேட்படையான் மடலேறுவன் எனக் கூறும் இடனுமுண்டு’ என்ற விளக்கத்தினை உரையாசிரியர் கச்சினர்க்கினியர் தருகின்றார். மேலும் மடன்மா கூறுதல் கைக்கிளேயாம்’ என்றும், மடல் திறம் என்றதல்ை அதன் திறமாகிய வரை பாய்தலும் கொள்க’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இவை பெருந்திணைக் குறிப்பு என்று சொல்லப்பட்ட காரணத்தால் மடலேறுதலைப் பற்றிய பாடல்கள் ஒரு சிலவே இலக்கியங்களில் அமைந்திருக்கக் காண்கிருேம்.

பெறற்கரிய தலைவியினைக் காணும் தலைவன் தன் கருத்தை இழக்கின்றான். அவனைக் கண்ட பொழுதிலேயே “பள்ளத்தில் பாயும் வெள்ளம் போல் தன் நெஞ்சம் அவள் பின் சென்ற பான்மையினைத் தன் பாங்கனுக்கு எடுத்துரைக்கின்றான். “பெரிய மலேயினிடத்து வீழும் அருவி, பாறைகளின் வெடிப்புக்களில் ஒலிக்கும் பல மலரையுடைய சாரலில் அமைந்த சிற்றுாரில் உள்ள குறவனுடைய பெருந்தோள் சிறுமகளினது ைேரப் போன்ற மென்மை, தீயையொத்த என் வலியைக்கெடச் செய்தது’ என்று நெஞ்சம் சோரக் குறிப்பிடுவான்: