151
151
குறுந்தொகைப் பாட்டும் தலைவன் கூற்றாக அமைக் துள்ளது. தோழியால் குறைமறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது’ என்ற துறை யமைந்த அப்பாடலின் கருத்து வருமாறு: ‘நெஞ்சே! அழகு ஒழுக விளங்கும் அசைந்த நடையை உடைய தலைவி நம்மாட்டு நெஞ்சம் நெகிழ்ந்திலள். நாம் அத் தலைவியினிடத்து விடுதற்கமைந்த துாது, சிறந்த உச்சியையுடைய பனேயின்கண் முதிர்தலே யுடைய பெரிய மடலால் செய்த குதிரைக்கு மணிகளமைந்த பெரிய மாலையை முறைமையோடு அணிந்தும் வெள்ளிய எலும்பை அணிந்தும் பிறர் இகழும்படி அம்மடல்மாவின் மேல் தோன்றி ஒருநாளில் பெரிய காணத்தை விட்டுவிட்டுத் தெருவின் கண் செல்லவும் தகுவதோ?’ என்பதாகும். இனி அக்குறுந்தொகைப் பாடலைக் காண்போம்:
“ விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி வெள்ளென் பணிந்துபிற ரெள்ளத் தோன்றி ஒருங்ாண் மருங்கிற் பெருகா னிக்கித் தெருவி னியலவுக் தருவது கொல்லோ கலிழ்த்தவி ரசைகடைப் பேதை மெலிந்தில ளும்விடற் கமைந்த துதே.’ “ மடலேறுதல் பற்றி நல்ல விளக்கம் அமைந்த இவ்விரு பாடல்களைப் பாடிய சிறப்பினல் இப்பாடல்களைப் பாடிய புலவர் மடல் பாடிய’ என்ற சிறப்போடு மடல் பாடிய மாதங்கீரனர்” என அழைக்கப்பெற்றார்.
தலைவிமேல் காமுற்ற தலைவன், கலேவியின் அழகு உருவத்தினை ஒரு கிழியில் எழுதிக்கொண்டு அதைத் தன் கையில் தாங்கிப் பிடித்து, தன்னைத் துன்புறுத்தியவள்
8. குறுந்தொகை : 182