153
153
இனிய விளக்கம் தங்துள்ளார். ‘காமம் மிக்க தலைவன் பனைமடலால் குதிரையைப் போல் ஒர் உருவம் அமைக் .துள்ள அதன் கழுத்தில் மணி, மாலே முதலியவற்றைப் பூட்டித் தன் உருவத்தையும் தலைவியின் உருவத்தையும் ஒரு படத்தில் எழுதிக் கையிலேந்தி அதன்மேல் யாவரும் அறிய ஊர்ந்து வருதலை மடலேறுதலென்பர்: அங்ஙனம் அவன் வருவதைக் கண்ட ஊரினர் பட முதலிய வற்றால், இன்னவருக்கும் இவனுக்கும் நட்பு உண்டு’ என்பதை அறிந்து அதனை வெளிப்படக் கூறிப் பழிப்பர்: அது கேட்டுத் தமர் மணம் புரிவிப்பர். மடலேறும் தலைவன் நீறு. எருக்கமாலை, ஆவிரம்.பூமாலை முதலிய வற்றை அணிந்து வருதல் வழக்கமென்று தெரிகின்றது.’
இக்கூற்றின் விளக்கமாக, சில குறுந்தொகைப் பாடல்களும், சில கலித்தொகைப் பாடல்களும் மடலூர் தலைப் பற்றிய விளக்கங்களே நயமுறத் தருகின்றன.
அப்பாடல்கள் வருமாறு:
‘ மாவென மடலு மூர்ய பூவெனக்
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகி ஞர்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே’
‘ பொன்னே ராவிரைப் புதுமலர் மிடைந்த
பன்னூன் மாலைப் பனைபடு கலிமாப் பூண்மணி கறங்க வேறி காணட் டழிபட ருண்ணுேய் வழிவழி சிறப்ப இன்னல் செய்த திதுவென முன்னின் றவள்பழி நுவலு மிவ்வூர் ஆங்குணர்ந் தமையினிங் கேகுமா ருளெனே’
== - ---
11. குறுந்தொகை: 17 12. குறுந்தொகை : 173