பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

154

‘ மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை

அணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்தியாத்து மல்லலூர் மறுகின்கண் இவட்பாடும் இ.தொத்தன் எல்லீருங் கேட்டிமின் என்று’ “ அணியலங் காவிரைப் பூவோ டெருக்கின் பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப ஓங்கிருங் பெண்ணை மடலூர்ந்தென் எவ்வகோய் தாங்குதல் தேற்றா இடும்பைக் குயிர்ப்பாக வீங்கிழை மாதர் திறத்தொன்று நீங்காது பாடுவேன் பாய்மா நிறுத்து ‘’ புனவரை யிட்ட வய்ங்குதார்ப்

பிடியமை நூலொடு பெய்ம்மணி கட்டி அடர்பொன் அவிரேய்க்கும் ஆவிரங் கண்ணி கெடியோன் மகன் கயங்து தந்தாங் கனைய வடிய வடிந்த வனப்பினென் நெஞ்சம்’ மேலும், ‘படரும் பனேயின்ற மாவும் சுடரிழை கல்கி யாள் நல்கியவை என்றும், ‘பூளை மென்மலர் ஆவிரை வேய் வென்ற தோளான் எமக்கீத்தபூ’ என்றும் தலைவன் தன் ஆற்றாமையினைக் கூறுகின்ற அவலம் நெஞ்சைத் தொடுவனவாகும்.

‘மடலேறுவன்’ என்று தலைவன் தோழியிடம் கூறு: வானே தவிர, உண்மையில் மடலேற மாட்டான் என்று உரைப்பர். ஆயினும் நெய்தற்கலியின் (24) பாடலொன் றின்கீழ் “இஃது இரந்து பின்னின்ற தலைவன் மடலேறிய வழி அவள் தமர் அஞ்சித் தலைவியைக் கொண்டு வந்து கொடுத்தலேக் கண்டோர் கூறியது” என்ற கொளு காணப்படுகிறது,

13. நெய்தற்கலி : 21:18-11

14. நெய்தற்கலி : 22 : 8-13 15. நெய்தற்கவி : 23 : 5-9