பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

155

“சான்றிர்! வாழ்வீராக. ஓரிடத்து வெற்றியினை யுடைய குதிரையின் மேலேயிருந்து போர்த்தொழிலே கடத்துவோளுகிய என்னை அம் மாவல்லாத மடன் மாவிலே ஏறி அக்களத்தே யன்றி மன்றின்கண்ணே தன்னை உள்ளுவித்தவள்’ என்றும், “உலகத்தையெல்லாம் பாதுகாத்தலே முயலும் உள்ளத்தை உடையோனகிய என்னை ஒருவர்பால் ஒன்றை இரத்தலே முயலும் இன்ன. தாகிய வருத்தத்தைச் செய்தவள்’ என்றும், ‘வழுவின சொற்கள் சொல்லாதபடி தெள்ளிய காவினலே வார்த்தை சொல்லவல்லார் முன்னே சொல்லுதல் என்னைப் பிறர் முன்னே ஒன்றையும் கல்லாத தன்மை யனாகக் காட்டியவள்” என்றும் தலைவன் குறிப்பிடு, கின்றான்.

“ அடன்மாமேல் ஆற்றுவேன் என்னை மடன்மாமேல்

மன்றம் படர்வித் தவள்; வாழி சான்றீர்’

‘’ புரவூக்கும் உள்ளத்தேன் என்னை இரவூக்கும்

இன்ன இடும்பை செய் தாள்; அம்ம சான்றீர்’

‘ வல்லார்முற் சொல்வல்லேன் என்னைப் பிறர்முன்னர்க்,

கல்லாமை காட்டியவள்; வாழி சான்றீர்.’ “

இவ்வாறு சொல்லி அவ்வூரிடத்து மறுகின்கண்ணே க்ண்டார் வருந்த மடன் மாவை ஏறிப்பாட, திருந்தின இழையினை உடையாளத் தான் பெறுதற்குப் பொருங் தின வார்த்தைகளைத் தான் கூறக்கேட்டு, பகைவர் போர்த்தொழிலை வல்ல பாண்டியனுக்கு அஞ்சி அரிய, திறை கொடுக்குமாறு போல, தமர் குடிப்பழுதாம் என்று அஞ்சி, தலைமகளை அவ்விடத்தே கொடுத்தார்:

--

16. நெய்தற்கலி : 24 : 9-10; 13-14; 19.20