156
156
‘ வருத்தமா ஊர்ந்து மறுகின்கண் பாடத்
திருந்திழைக் கொத்த கிளவிகேட் டாங்கே பெருந்தாதார் போர்வல் வழுதிக் கருந்திறை போலக் கொடுத்தார் தமர்.’ இதல்ை பிற்காலத்தில் மடலேறுகின்ற மரபு இருந்தது என்பது புலகிைன்றது. ஆயினும் இஃது அருகிய வழக்கே என்பதும் நன்கு போதரும்.
திருவள்ளுவர் காமத்துப்பாலில் ‘காணுத்துற வுரைத்தல்’ என்ற அதிகாரத்தில் ஆறுபாடல்களில் மட லேறுதல் குறித்துப் பாடியுள்ளார். காமத்தால்
துன்புற்றுக் காதலியின் காதலைப் பெருமல் வருந்தின வர்க்குக் காவலான மடலூர்தலல்லாமல் வலிமையான துணை வேருென்றும் இல்லை என்றும், காதலியின் பிரி வாலாகிய துன்பத்தைப் பொறுக்காத என் உடம்பும் உயிரும் காணத்தைத் துறந்து மடலூரத் துணிந்தன. என்றும், காணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றி ருந்தேன்; காதலியைப் பிரிந்து வருந்துகின்ற இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலேயே பெற்றுள்ளேன்” என்றும், மடலேறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளே யணிந்த காதலி எனக்குத் தந்தாள்’ என்றும், “மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக வினைக்கின்றேன்; காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காம லிருக்கின்றன என்றும், கடல்போன்ற காமநோயால் வருந்தியும் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு மடலேரும விருக்கும் பெண் பிறப்பைப்போல் பெருமையுடைய பிறவி பிறிதில்லை என்றும் தலைவன் கூற்றாகவும் தன் கூற்றாகவும் திருவள்ளுவர் கூறியுள்ளார்.
17. தெய்தற்கலி 24 : 19-20