பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14



அழைப்பர். நம் தமிழ் முன்னேர் இப்பகுதியினைக் குமரிக் கண்டம் என அழைத்தனர். இங்குத்தான் மனிதன் முதலில் தோன்றியிருக்கக்கூடும் என்று வரலாற்றுப் பேராசிரியர் தம் நூலின்கண் புலப்படுத்தியுள்ளார். எரிமலை வெடிப்பும் கிலாடுக்கமும் தென்னகத்தில் இல்லாத தன்மையைக் கொண்டு இக்கருத்து வலியுறுகின்றது.

பழந்தமிழ் இலக்கியங்களிலும் கடல்கோளைப் பற்றிய குறிப்புக்கள் உண்டு. தற்போதைய குமரிமுனைக்குத் தென் பகுதியில் பஃறுளியாறு என்னும் ஆறு பாய்க்தி வளம் பரப்பியதாகவும், பன்மலையடுக்கம் செறிந்து விளங்கியதாக வும் பின்னர் அவை கடல்கோளால் அழிந்துபோனதாகவும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. புறநானூறு. இறையனர் களவியல் உரை” முதலியனவும் இக்கருத்துக்குச் சான்று பகர்கின்றன. இவ்வாறு கடல்கொண்ட கிலப்பகுதியே

––------------

2. Considering the fact that we have scarcely any trace of Volcanic eruptions or earth tremours as they frequently occur in North India, it may be said that South India was the part of the world to settle first as a land mass. It is probable that the origins! Aman might have come into existence first in South India.

—V. R. Ramachandra Dikshitar, Pre-Historie South India, p. 234

3. வடிவேல் எறிந்த வான் பகை பொருது

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

-சிலப்பதிகாரம், காடுகாண் காதை, 19-20.

. 4. முந்நீர் வி.முவின் நெடியோன்

நன் னி ர்ப் பஃறுளி மணவிஅம் பலவே

-புறநானூறு 9:10-11.

.5. இறையனர் களவியல் உரை பக்கம், 6.