பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

158

கடலன்ன காமம் உழ்ந்தும் மடலேறப் பெண்ணின் பெருந்தக்கது இல்’ “

என்று கூறியுள்ளமை தொல்காப்பியனர் கருத்துக்கு அரண் செய்வதாகும். இருப்பினும் இடைக்காலத்தில் இம்மரபு பிறழ்ந்ததனைக் காண்கின்றாேம், திருமங்கை யாழ்வார், மடலென்னும் துறையைப் பெருக்கி ‘சிறிய திருமடல்’, ‘பெரிய திருமடல்’, என்று பிரபந்தமாக் கினர்.

‘’ சீரான, செங்க ணெடியானைத் தேன் துழாய்த்

தாரானை, தாமரைபோல் கண்ணுனை எண்ணருஞ்சீர் பேரா யிரமும் பிதற்றி, பெருக்தெருவே ஊரார் இகழினும் ஊரா தொழியேன்.கான் வாரார்பூம் பெண்ணை மடல்’ “ என்று சிறிய திருமடலிலும்,

“ --------------------------------- மற்றிவைதான்

உன்னி யுலவா வுலகறிய ஆர்வன்கான் முன்னி முளைத்தெழுந் தோங்கி யொளிபரங்த மன்னியபூம் பெண்ணை மடல்’ “

என்று பெரிய திருமடலிலும் வருகின்ற குறிப்புகள் நய முடையன. இவை கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் கயந்த பக்கத்தில் அமைவனவாகும். இவ்வாறு இவற் றிற்கு அமைதி கூறலாம். நம்மாழ்வாரும் திருவாய் மொழியில் மாசறுசோதி என்ற பாசுரத்தில்.

25. திருக்குறள் : 1137 26. தாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். சிறிய திருமடல் : 76.87 27. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் : பெரிய திருமடல் : 14.7.149