பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

159

“ காணும் நிறையும் கவர்ந்தென்னை கன்னெஞ்சம் கூவிக் கொண்டு சேணுயர் வானத் திருக்கும் தேவபி ரான்றன்னை ஆணையென் தோழி! உலகு தோறலர் தூற்றி, ஆம் கோணைகள் செய்து குதிரி யாம்மட லூர்துமே’ “ என்ற பாடலில் மடலேறுதல் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். நம்பியகப்பொருள் களவியல் பகுதியில் பாங்கியிற் கூட்டத்தில், மடற்கூற்றும் மடல் விலக்கும்’ என்ற பகுதி காணப்படுகின்றது.

இரந்து குறைபெருது வருந்திய தலைவன் மடலே பொருளென மதித்தலும், பாங்கிக்குத் தலைவன் மட லேறுதலை உலகின்மேல் வைத்து உரைத்தலும், அம் மடலேற்றினைத் தலைவன் தன்மேல் வைத்துச் சாற்றலும், பாங்கி, தலைவி யவையத்து அருமை சாற்றலும், தலைவன் தன்னைத்தானே புகழ்தலும், பாங்கி அருளியல் கிளத் தலும், கொண்டு கிலே கூறலும் இத்துறையைச் சார்ந்தன

வாகும. ==

பிற்காலத்தில் சிறு பிரபந்த வகைகள் வளர்ந்த பொழுது. மடலும் வளர்ந்தது. பன்னிரு பாட்டியல்’, “இலக்கண விளக்கம்’, ‘வெண்பாப் பாட்டியல்’, முதலியன மடலின் இலக்கணத்தை வகைப்படுத்திக் கூறுகின்றன. ‘வருணகுலாதித்தன் மடல்’, “சித்திர மடல் “உலா மடல் முதலியன பிற்காலத்தில் மடல் குறித்து எழுந்த இலக்கியங்களாகும். ஆயினும் பிற்கால நூல்களில் சங்கப் பாடல்களிலும், ஆழ்வார் பாசுரங்களிலும் மட லேறுதல் குறித்த பாடல்களில் காணப்பெறும் இலக்கிய ாயம் இல்லாமையைக் காணலாம். இவ்வாறு தொல் காப்பியனர் குறிப்பிட்ட மடலேறுதல் காலத்திற்குக் காலம் வளர்ந்தும், பிறழ்ந்தும் இலக்கிய வகையாக வளர்ந்துள்ள விகலமையினே இலக்கியவரலாறு படிப் போர் நன்குணர்வர்.

28. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் : திருவாய்மொழி : மாசறு

சோதி : 9