பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

12

குறள்வழி நடப்போம்

தமிழ்நாடு செய்தவப் பயனய்த் தோன்றிய திருவள்ளுவர் பெருமானின் இரண்டாயிரம் ஆண்டுத் திருநாள் இது. சராயிரம் ஆண்டுகளுக்கு முன்னுல் வள்ளுவர் பெருமான் தமிழ்மொழியில் வழங்கியருளிய கருத்துக்கள் காலம், இடம், இனம் முதலிய அனைத்தையும் கடந்து ஒளிரும் கருத்துக் கருவூலங்களாகும், “அவர் தொடாத துறை ஒன்றுமில்லை; தொட்ட துறைகளே அழகுபடுத்தாமல் விட்டதில்லை” என்ற மேட்ைடு அறிஞர் கூற்றிற்கு இயைய வள்ளுவர் பெருமான் வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் நுணுகிக் கண்டுள்ளார். தம் அறிவால், அனுபவத்தால் கண்ட உயர்ந்த உண்மைகளை ஒளியாது நமக்கு எடுத்துத் தந்துள்ளார். எனவேதான் எல்லாப் பொருளும் இதன் பாலுள. இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்’ என்று மதுரைத் தமிழ் நாகனர் என்னும் புலவர் பாராட்டு மொழியும் பிறந்தது.

நூற்களை இருவகையாகப் பகுப்பர் அறிஞர். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பயன்படும் நூல்களே Books for the hour Grørspun, Gró5@5mor.guth gorum & விளங்கிடப் பயன்படும் நூல்களை Books for ever என்றும் வழங்குவர். வள்ளுவர் வழங்கிய வான்மறை, உலகம் உள்ளளவும், மனித சமுதாயம் உயிர்க்கும் வரையிலும்