161
வாழ்க்கைக்கு வழிகாட்டியாக கின்றிலங்கும் கீர்த்தி படைத்தது ஆகும். எனவே
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு”
என்று பாரதியாரும் பொருத்தமுறப் பாடினார்.
திருவள்ளுவர் பெருமான் வாழ்வியல் உண்மைகளை நன்கறிந்தவர்; வாழ்க்கையை உற்று நோக்கியவர்: உறுதிப் பொருள்களைப் பிறர் உளங்கொளும் வண்ணம் எடுத்துரைத்தவர். கீதைப் பெருநூலைப் பற்றி அண்ணல் காந்தியடிகள். 'அந்நூல் மூளையைக் கொண்டு, உணர்வதன்று; இதயத்தைக் கொண்டு உணர வேண்டிய நூல்’ என்றனர். அவ்வாறே திருவள்ளுவர் பெருமான் இயற்றிய திருக்குறள் அறிவு வேட்கைக்கும், விரிவுக்கும் ஆராய்ச்சிக்கும் மட்டும் படித்து அமைகின்ற நூல் அன்று. அதற்கும் மேலாக வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதற்கு வழித்துணையாக அமைந்த நூலாகும்.
கல்வியறிவு என்பது உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வேண்டற்பாலது. புறத்தே தோன்றும் பொருள்களைப் பார்ப்பதற்கு எப்படிக் கண்கள் இரண்டும் தேவையோ அது போன்றே அகவிருள் அகல கோக்குதற்குக் கல்விக் கண்களின் ஒளி பெரிதும் தேவை. ‘கண்ணுடையர் என்பவர் கற்றாேர் என்றும்’, ‘முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்’ என்றும் அவர் கூறியிருப்பது இக்கருத்திற்கு அரண் செய்வதாகும். ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே என்றும், கல்வி தவிர மற்றப் பொருள்கள் அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல என்றும் திருவள்ளுவர் புகன்றுள்ளார். ஒரு பிறப்பில் ஒருவன் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல், அக்கல்வி அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மையுடையது
11