162
162
என்றும் குறிப்பிடுகின்றார். மணலில் உள்ள கிணற்றில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல் மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும் என்பதனே.
“ தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’ ‘ என்னும் குறட்பாவால் விளக்கியுள்ளார். கற்றவனுக்குத் தன்நாடும் ஊரும் போலவே வேறு எதுவாயினும் நாடாகும்: ஊராகும்; எனவே, ஒருவன் சாகும் வரையில் கல்லாமற் காலங் கழிப்பது எற்றுக்கு? எனச் சாடுகின்றார்,
இவ்வாறு பலவாருகக் கல்வியின் இன்றியமையா மையினை இயைபுற வற்புறுத்தும் வள்ளுவர் கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்கவாறு கன்னெறியில் விற்கவேண்டும் என்னும் மிகப் பெரிய வாழ்வியல் உண்மையை,
“ கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக “ “ என்னும் குறளால் வெளிப்படுத்தியுள்ளார்.
வாழ்க்கையின் சிறப்பு கற்றலில் மட்டும் இல்லை; கற்ற பின் கற்றபடி கடத்தலிலேயே இருக்கின்றது என்பதே ஈண்டுச் சுட்டப்படும் கருத்தாகும்,
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ “ என்ற குறளும் நடந்து காட்டுதலின்-அருமையை-வெளி யிடுகின்றது.
1. திருக்குறள் , 396
2. திருக்குறள் : 391 3. திருக்குறள் : 664