பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

166

“ பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை'’

என அழகுற மொழிந்துள்ளார். “ஒழுக்கம் உடைமையே குடிமை என்றும் போற்றுகின்றார், உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டுவிடுவதே வேண்டப்படும் நெறி என்கிறார்,

அம்பு நேராகத் தோற்றமளிக்கின்றது. ஆயினும் அது கொடியதேயாகும். யாழின் கொம்பு வளைந்து தோன்றினும் அது நன்மையானதாகும். எனவே மக்களின் பண்புகளையும் செயல் வகையால் (கற்ற படிப்பால் அன்று) உணர்ந்து, கொள்ள வேண்டும் என்னும் உயர்ந்த கோட்பாட்டினே, ‘ கணைகொடிது யாழ் கோடு செவ்விது ஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்’

என்ற குறள்வழி விளக்கியுள்ளார்.

நடத்தையில் மேம்பட்டவரையே சான்றாேர் என மொழிவர். தாயும் தன் மகனைப் பிறர் சான்றாேன் எனப் புகழ்ந்து மொழியும்பொழுதே ஈன்ற பொழுதிற் பெரிது வக்கும் என்கிறார் வள்ளுவர். “மகன் தங்தைக்கு ஆற்றும் உதவி இவன் தங்தை என்னேற்றான் கொல் எனுஞ்சொல்’ தானே!

‘கற்றபின் நிற்பதில்’ என்னும் கருத்திற்குப் பெரிதும் அரண் செய்வதாக விளங்கும் குறள் பேதைமை அதிகாரக் தில் வருகின்றது:

“ ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்.”

11. திருக்குறள் :132 12. திருக்குறள் : 279 13. திருக்குறள் : 834