பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

</noinclude15

மனித நாகரிகம் வளர்ந்த தொட்டில் (Cradle of human race) என்பர். சிலர் மத்தியதரைக் கடலை அடுத்த சிலப்பகுதியில் மக்கள் முதன் முதலில் தோன்றிப் பின் பல்வேறு காடுகளில் சென்று குடியேறினர் என்பர். ஆயினும் ‘பழங் தமிழ் காட்டு மக்களே முதலில் தோன்றிய மனித இனம் என்றும், அவர்கள் வெவ்வேறு காடுகளுக்குச் சென்று பிரிந்து வாழ்ந்த பின் வேறு வேருக இனங்கள் வளர்ந்தன என்றும் கொள்வது பொருந்தும்’ என்பது அறிஞர் கண்ட உண்மை யாகும்.

வரலாற்றின் மிகப் பழங்காலத்திலே தென்னகத்தில் வாழ்ந்த மக்கள் தமிழர் என்று வழங்கப்பட்டதோடு, வரலாற்றுத் தெளிவு நோக்கித் திராவிடர்கள் என்றும் வழங்கப்பட்டார்கள். கிறித்துநாதர் பிறப்பிற்கு ஐயாயிரம் ஆண்டுகள் முற்பட்டதாகக் கருதப்படும் மொகஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம், வரலாற்றுப் பழமையும் புகழும் வாய்ந்த சுமேரிய நாகரிகத்திற்கு இணேயான திராவிட காகரிகத்தைக் கொண்டிருந்தது என்று சர் ஜான் wமார்ஷல் முதலான தொல்பொருளியல் ஆராய்ச்சி அறிஞர்கள் துணிகின்றனர். அம் மக்கள் பேசிய பழங் திராவிட மொழியின் கூறுகள் தமிழ் மொழியில் காணப்படு வதால் தமிழ் மொழியே இன்று உலகில் வாழும் மொழி களில் மிகப் பழமையான மொழியாகும் என்பர் மறைத் திரு. ஹிராஸ் பாதிரியார் அவர்கள். வடநாலார் தமிழரைத்

6. Being Dravidiars the inhabitants of Mohenjodaro in Northern India naturally spoke a Dravidian language in which the “earliest proportion of the words used are found in Tamil. This confirms the common belief that Tamil is the oldest of the present ‘languages.

— Rv. H. Heras, Light on the Mohenjodaro Riddle, p. 14.