பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 திருவள்ளுவர் தெளிவுறுத்தும்

வாழ்க்கை

இலக்கியத்தின வாழ்க்கையின் உரைகல் என்பர் அறிஞர். தமிழின் பழம்பெரும் இலக்கியங்களாகிய சங்க இலக்கியத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழந்த பழந்தமிழரின் பீடு கிறைந்த பெருவாழ்வினைக் காணலாம். வாழ்வின் செழுமை ஒருபுறமும், வறுமையின் வாட்டம் பிறிதொருபுறமும் விளங்கின என்பது சங்க இலக்கியங்கள் நமக்கு உணர்த்தும் செய்தியாகும். வரலாற்றின் தொடக்க காலத்திலேயே நல்ல நாகரிகத்தினேப் பெற்றிருந்த தமிழகப் பெருமக்களின் வாழ்வு, குறிக்கோளினேக் குறிக்கொண் டிருந்தது. சங்க காலப் பண்பாடு தமிழகத்தின் மாண்பு யர்ந்த பண்பாடு எனப் போற்றிப் புகழப்படும் அளவுக்கு அமைந்திருந்தது.

“ புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்

என்பது புறநானூறு. எனவே பழியற்ற வாழ்வு வாழ்வதே அன்று ஆன்றாேரால் பாராட்டப்பட்டது.

திருவள்ளுவர் தமிழ்நாடு செய்தவப் பயனுய்த் தோன்றிய சான்றாேர், அறவோர்; அறிஞர்; பண் பாட்டினர். எனவே அவர் இயற்றிய திருக்குறளில் ஒரு முழுமை நிறைந்த குறிக்கோள் வாழ்வினைக் காணலாம்.

1. புறநானூறு , 182 : 5.6