பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

169

வள்ளுவர் தெள்ளத் தெளிவாக வாழ்க்கையின் பண் பினையும் பயனையும் உணர்த்திய சான்றாேர் ஆவர். எனவே கம் அறம்கூறு காவால்,

“ அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் கன்று’ “ என்றார், அறம் எனப்பட்டதே என்பதிலுள்ள ஏகாரத்தை ாோக்குக, அஃது தேற்றேகாரமாகும். அது தெளிவுப் பொருளில் வந்துள்ளது. இதிலிருந்து அறத்தின் நெறி யிலிருந்து பிறழாமல் வாழ்வதே இல்வாழ்க்கை என்று திருவள்ளுவர் கருத்துக் கொண்டார் என நன்கு தெளியலாம். இத்தகைய இல்வாழ்க்கை பழியினின்றும் முற்ற நீங்கியதாக இருக்க வேண்டும் என்பதனையும், தமக்குக் கிடைத்த பழியின் ங்ேகிய பொருளைப் பிறர்க்கும் பகிர்ந்து தந்து வாழ வேண்டும் என்பதனையும் திருவள்ளுவர் பெருமான் பின் வரும் குறளில் திறம்படக் கூறியுள்ளார்.

‘ பழியஞ்சிப் பாத்துரண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.’ “ மேலும் அவர் இல்வாழ்க்கையில் அன்பும் அறனும் இணைந்து இயங்க வேண்டும் என்பதனைக் குறிப்பிட்டு, அவ்வாறு விளங்குவதே வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகுமென்றும் விளக்கியுள்ளார். திருவள்ளுவர் அன் பிலும் அறத்திலும் கொண்டிருந்த நம்பிக்கை பெரி தாகும். உலக உயிர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து தொடர்பு கொள்வதற்கு அன்பு, வாழ்க்கையின் அடித் தளமாக அடைய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். அவ்வாறு இணைந்த உயிர்க்குலம் இன்பத்தோடும் அமை தியோடும் வாழ வேண்டுமானல், அவை மேற்

2. இருக்குறள் : 49 .3. திருக்குறள் : 44