பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

170

கொள்ள வேண்டிய நெறி அறத்தின் ஆருக விளங்குதல் வேண்டும் என்று கருதினர். எனவே “அன்புடைமை’ என்ற அதிகாரத்தில் அருமையான உயிர்க்கு உடம்போடு: பொருந்தியிருக்கும் உறவே அன்போடு பொருந்தி வாழும் வாழ்வின் பயன் என்று கூறுமுகத்தான்,

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு’ ‘

என்று குறிப்பிட்டுள்ளார். அன்புடையதாகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையினை உடையவர் உலகத்தில் எஞ் ஞான்றும் இன்புற்று வாழும் சிறப்பினைக் கொண்டவ. ராவர் என்ற கருத்துப்பட,

“ அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்துஞ் சிறப்பு’ ‘ என்னும் குறளே யாத்துள்ளார். அன்பிலே அவர் கொண்டிருந்த அளவு கடந்த ஆர்வம் மேற்கூறப்பட்ட குறட்பாக்களால் குறைவற இலங்கக் காணலாம். இதற்ைருன் புறத்துறுப்புக்கள் சிறக்கப்பெற்ற ஒருவனே விட அகத்து உறுப்பாகிய அன்பு சிறந்த ஒருவனேப் பாராட்டுகின்றார்.

“ புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை - அகத்துறுப்பு அன்பி லவர்க்கு,’ “ எலும்பில்லாத உடம்பினேயுடைய புழு ஒன்றினை வெயில் வாட்டி வதைத்தல் போல, அன்பு இல்லாத உயிரை அறம் தவருது வருத்தும் என்றும் திருவள்ளுவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

4. திருக்குறள் : 73

5. திருக்குறள்: 75 6. திருக்குறள் : 79