பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

172

சிறப்புற்று விளங்கிலுைம் அதனல் யாதொரு பயனு மில்லை.

  • மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்,’ “

ஆதலால் மனைவி எனப்படுபவள் இல்வாழ்க்கைக்கு இயைந்த நற்பண்பு உடையவளாகவும். கணவனுடைய வருவாய்க்குத் தக வாழ்க்கை கடத்துபவளாகவும் முதற் கண் துலங்கவேண்டும். இத்தகு பண்புலம் பரக்க வாய்க்கப் பெற்றவளே. வாழ்க்கைத் துணை’ என வாயார உவகையுடன் அழைப்பதற்குத் தகுதி உடையவளாவள்:

“ மனத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.'’ ‘’

நல்ல வாழ்க்கைத் துணைவிக்கு அடுத்து வேண்டுவது கற்பென்னும் திண்மையாகும். கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்னைத் திருமணத்திற் கொண்ட கணவனையும் காப்பாற்றித் தகுதி சான்ற புகழையும் மங்காமல் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண் எனத் தக்கவளாவள் என்பது திருவள்ளுவர் உணர்த்தும் தெளிந்த கருத்தாகும்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்’

இவ்வாறு நிறைந்த பண்புகளுடன் கணவனேப் போற்றிக் கடமையைச் செய்து வாழும் மகளிர் பெருஞ் சிறப்பிற்குரிய வீட்டுலக வாழ்வினைப் பெறுவர். எனவே

10. திருக்குறள் : 52 11. திருக்குறள் : 51 .12. திருக்குறள் : 56