173
173
மாண்பு பொருந்திய மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கை மங்கலமாக அமைகின்றது.
மங்கலம் என்ப மனைமாட்சி ‘'’
காதல் மனையாளும் காதலனும் கருத்தொன்றித் தீதில் கருமம் நிகழ்த்தி வாழும் வாழ்வே வடிவும் வனப்பும் கொண்டு துலங்கும் வாழ்க்கையாகும். அவ்விருவரும் பெறத்தக்க பேறுகளில் நன்மக்களைப் பெறுவதே பெரும் பேருகும்.
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. ‘'’ கணவனும் மனைவியும் கன்மக்களோடு அன்பில் அடித்தளம் அமைத்து, அறத்தின் நெறியில் ஒழுகிவரும் வாழ்வில் விருந்தோம்புதல்’ எனும் விரும்புகின்ற பண்பு முதலிடம் பெறுகின்றது. வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் வரும் விருந்தின ரைப் போற்றி உதவி செய்தற் பொருட்டேயாகும் என்பர் திருவள்ளுவர்:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. ‘'’
இவ்வாறு விருந்தோம்பி கன்றாற்றி வாழும் பொழுது இனியவை கூறல் என்னும் இனிய பண்பும் இல்வாழ் வானிடம் இயையப் பெறுதல் வேண்டும். வணக்கம் உடையவனாகவும் இனிய சொல்லே வழங்குவோனுகவும் ஆலே ஒருவனுக்கு அணிகலமாகும். மற்ற பிற அணிகள் அணிகளாகா.
_
18. திருக்குறள் : 60 14. இருக்குறள் : 61 10. திருக்குறள் : 81