பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

174

“ பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற. ‘'’

பிறர்க்கு நன்மை பயப்பனவற்றை நாடி இனிமை தோய்ந்த சொற்களையே சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறையும், அறம் வளர்ந்து பெருகும்.

‘’ அல்லவை தேய அறம்பெருகும் கல்லவை

காடி இனிய சொலின். ‘ !

இல்வாழ்வில் தலைப்பட்டு வாழ்கின்றவர்களுக்குப் பலருடைய துணையும் உதவியும் வேண்டற்பாலன. ஆதலின் குற்றமற்றவர்களுடைய உறவு வேண்டும். துன்பம் வந்த காலத்தில் துணையாக கின்று உதவியவர்களின் நட்பைக் கைநெகிழவிடாமல் போற்ற வேண்டும். அங்கட்பினை இனி வரும் பிறவிகளிலும் மறவாமல் போற்றுதலே பெரியோர் கடன் என்பர். எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்கும் வழி உண்டு. ஆனல் ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு மட்டும் உய்வு இல்லை என்று உறுதியாகக் கூறுகின்றார் வள்ளுவர்:

“ எங்கன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ங்கன்றி கொன்ற மகற்கு. ‘'’

நன்றியுணர்வோடு வாழும் வாழ்க்கையில் நடுவு கிலேமைக்குத் தனியிடம் தருதல் வேண்டும். நடுவு கிலேமை பிறழ்ந்து கடந்தால் ஆக்கம் வந்து இயையும் என்ற நிலை எற்பட்டாலும் அவ் ஆக்கத்தின அப்பொழுதே கைவிட வேண்டும். நடுவுகிலேமையினின்றும் வழுவாது கின்று,

16. திருக்குறள் : 95 17. திருக்குறள் : 96 18. திருக்குறள் : 1.10