175
175
அறநெறியில் கிலேத்து வாழ்கின்றவன் அடைந்த வறுமை ரிலையினைச் சான்றாேர் உலகம் கேடு என்று கொள்ளாது.
‘ கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. “
நன்றியுணர்வும் நடுவுநிலை நெஞ்சமும் மட்டும் நல்வாழ் விற்குப் போதுமா? உடன் அடக்கமும் வேண்டும். அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்: அடங்காமை ஒருவன் வாழ்வில் பொல்லாத இருளைப் புகுத்திவிடும். எனவே அடக்கத்தை உறுதிப் பொருளாகக் காக்க வேண்டும். ஏனெனில் அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
‘ காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினுங் கில்லை உயிர்க்கு. “
அடக்கத்தோடு ஒழுக்கத்தினையும் ஒருவன் கொள் வானேயானல் பொன்மலர் நாற்ற முடைத்த தாகுமன்றாே? ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடையலாம்; ஆயின் ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத்தகாத பெரும் பழியும் ஒருவர்க்கு வந்து சேரும் என்பதனையும் நன்கறிதல் வேண்டும். -
“ ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. ‘'’
எனவே அத்தகு ஒழுக்கத்தினை உயிரைவிடச் சிறந்ததாகப் போற்ற வேண்டும். பிறருடைய மனைவியை விரும்பி ாோக்காத பெரிய ஆண்மையினைச் சான்றாேர் நிறைந்த ஒழுக்கமாகக் கருதுவர்.
_10. திருக்குறள் : 1.17 10. திருக்குறள் : 122 81. திருக்குறள் : (37