16
திராவிடர் என வழங்கினர். தமிழகத்தை ‘தமிரிகி’ என்று ரோமர்களும், தெஹிமோளோ என்று சீனர்களும் வழங்கினர்.
தமிழகத்தின் எல்லை மிகப் பழங்காலத்திலேயே வரை யறுக்கப்பட்டு விட்டதனைச் சங்க இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
“ வடாஅது. பனிபடு கெடுவரை வடக்கும்
தெஞஅது. உருகெழு குமரியின் தெற்கும், குளு அது. கரைபொரு தொடுகடல் குணக்கும், குடாஅது, தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்’ “ தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை’ “ என்ற புறநானூற்றுத் தொடர்களும் ‘ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியம் தந்த தொல்காப்பியனரின் ஒரு சால் மாளுக்கராகிய பனம்பாரனரின் பாயிரமும் பழச் தமிழ் நாட்டின் எல்லையினை நன்கு குறிக்கின்றன. சிலப்பதிகார உாையாசிரியர் அடியார்க்கு கல்லார் உரையில் குமரிக்குத் தெற்கே அக்காலத்தே விளங்கிய காற்பத் தொன்பது காடுகளைப் பற்றிய குறிப்பையும்,காண்கிருேம்.
தமிழகம் தொன்மை மிகுந்ததுபோலவே இங்கு வழி வழியாக வாழ்ந்து வரும் தமிழினமும் தொன்மையும் சிறப்பும் கொண்டு துலங்குவதாகும்.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே-வாளொடு முன்தோன்றி மூத்த குடி’ -
7. புறநானூறு 8 , 1-4
8. புறநாஅாறு: 17 : 1.2
9. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு கல்லுலகத்து - -தொல்காப்பியம்; சிறப்புப் பாயிரம்.