பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

180

காம் வழிபடுதல் இன்றியமையாதது” என்று கூறிள்ை. அதுகேட்ட மன்னன் பத்தினிக் கடவுளுக்குரிய படிமம் சமைத்தற்குரிய கல்லை இமயத்தினின்றும் கொணர்ந்து, கங்கையாற்றில் தாய்மைப் படுத்துதல் மிகவும் பொருந்திய செயல் என்ற முடிவுகட்டின்ை. இமவான் அவன் விருப்பத்திற் கிணங்காவிடின் வஞ்சியினின்றும் வஞ்சி மாலை குடித் தானேயுடன் சென்று புறத்துறைக் கமைந்த வீரச் செயல்கள் பலவற்றையும் ஆங்கு அவற்குக் காண்பிப்பேன் என்று வீரமொழி விளம்பின்ை. இதுகேட்ட தானேத் தலைவனம் வில்வவன் கோதை சேரனின் வீரத்தினை விளங்க எடுத்துரைத்தான்.

“வேந்தர் வேந்தே நம்மையொத்த வேந்தரான சோழ பாண்டியர் தம்மொடு இகல்கொண்டு கொங்கர் செங்களத்தே தம் புலிக்கொடியையும் மீனக் கொடியையும், போர்க்களத்தே. புறம்விட்டு ஓடினராயினும், அச் செய்தி திக்கயங்களின் செவிக்கு எட்டி எங்கும் பரவிற்று. கொங்கணர், கலிங்கர், கருகாடர், பங்களர், கங்கர், கட்டியர், வடவாரியர் இவர் களுடன் தமது தமிழ்ச் சேனே கலந்து பொருத செருக் களத் தில் தாம் யானையை விட்டுப் பகைவரை யழித்த அரிய வீரச் செயல் இன்னும் எங்கள் கண்களைவிட்டு நீங்கவில்லை, அன்றியும், எங் கோமகளாய் விளங்கிய தம் தாயைக் கங்கையாற்றில் ரோட்டிவந்த அக்காலத்தே, எதிர்த்துவந்த ஆரியவரசர் ஆயிரவரைத் தாம் ஒருவராகவே கின்றுபொருத. போர்க் கோலத்தைக் கடுங்கட் கூற்றமும் கண்விழித்து வியந்து கண்டதன்றாே? விேர் நீர் சூழ்ந்த இவ் நிலவுலகத்தை வென்று தமிழ் நாடாக்க வேண்டி வடநாட்டுச் செலவு. மேற்கொள்ளத் துணியின் ஆங்கு நும்மை எதிர்ப்பவர் எவருமே இல்லை என்பது உறுதி’ என்று செங்குட்டுவன்