181
181
முன்னுளில் ஆற்றிய வீரப்போரின் சிறப்பினை விம்மிதத் அடன் மொழிந்தான்,
“ நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக்
கொங்கர்செங் களத்துக் கொடிவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தன ராயினும் ஆங்கவை திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு காடர் பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன் கழறலை வேட்டமென் கட்புலம் பிரியாது கங்கைப் பேரியாற்றுக் கடும்புனல் நீத்தம் எங்கோ மகளை யாட்டிய அங்காள் ஆரிய மன்னர் ஈரைஞ் நூற்றுவர்க் கொருநீ யாகிய செருவெங் கோலம் கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்.”
இப்பகுதி கொண்டு செங்குட்டுவன் மேற்கொண்ட முதலாவது வடபுலப் போரினே அறியலாம்,
இனி, இளங்கோவடிகள் விளங்க வருணிக்கும் இரண் டாவது வடபுல எழுச்சி அல்லது குயிலாலுவம் என்னு மிடத்தில் ஆரிய அரசர்களோடு செங்குட்டுவன் நிகழ்த்திய விரப்போரினைக் காண்போம்.
வஞ்சி மாநகரில் ஆசான் பெருங்கணி அமைச்சருடன் தானே க்கலேவர் தம்மொடுங் கூடிச் சேரன் செங்குட்டுவன் விரி,மிருந்தபோது தன் சேனைத்தலைவரை நோக்கிப் பின் வருமாறு கூறுவானுயினன்:
‘ஆரிய மன்னர் பலரும் தம் நாட்டில் நிகழ்ந்த சுயம்வர மொன்றன் பொருட்டுக்குழுமி மகிழ்ந்திருந்த விடக் கே. “தென்றமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து மின்தவழும் இமயவெற்பில் விளங்குவிற்
பி. சிலப்பதிகாரம் : காட்சிக்காதை : 152.164