பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

182

புலி கயல் பொறித்த நாள், எம்போலும் முடிமன்னர் ஈங்கில்லே போலும் என்று நகையாடி இகழ்ந்தனர் என்று இமையத் தாபதரால் அறிந்தேன். அவ்வசை மொழி எம் போன்ற சோழ பாண்டிய வேந்தர்க்கு இகழ்ச்சியைத் தருவ தாகும். ஆதலின், அங்ஙனம் இகழ்ந்த வடவாரிய மன்னர் தம் முடித்தலையில் பத்தினிக்கடவுளைச் சமைத்தற்குரிய கல்லே ஏற்றிக்கொண்டு வருவேன்; அங்ஙனம் செய்யாது. என் வீரவாள் வறிதே மீளுமாயின். என்ைேடும் மாறு: பட்ட பகையரசை நடுங்கச்செய்து அடக்காமல், வளஞ் சான்ற என் காட்டுக்குடிகளை வருத்தும் கொடுங்கோலனுகக் கடவேன்’ என்று தன் அத்தாணி மண்டபத்தே சினத் துடன் வஞ்சினம் கூறினன்.

அது கேட்ட ஆசான், அவன் தன் கோபம் தணிவதாக என்று கூறியவளவில், கணியெழுந்து வடதிசைப் பெயர்ச் சிக்கு உரிய நன்முகூர்த்தநேரம் அதுவே என எடுத்துரைத் தான். கிமித்திகன் கூறியதற்கு உடன்பட்ட செங்குட்டுவன், தன் வாளேயும் குடையையும் அந்த கன்முகூர்த்தத்தில் வட திசைப் பெயர்த்து காட்கொள்ளும்படி ஆணையிட்டான், அன்றிரவு போர் விருப்புற்றுத் தன்னுடன் வருதற்கிருக்கும் தானேகளுக்கும், தானத் தலைவர்களுக்கும் பெருஞ் சோறளித்து உபசரித்து, உற்சாகப்படுத்தின்ை. மறுகாட் காலையில் முரசு முழங்கவும், சிவனருளே வேண்டி வலங் கொண்டு, திருமாலின் பிரசாதத்தினை வாங்கித் தன் மணிப் புயத்தேந்தியவய்ை, நாடக மடந்தையர் துதிக்க, குதரும் மாகதரும் வைதாளிகரும் மன்னனின் வெற்றிப் புகழைப் பாடி உடன் சென்றனர். யானை வீரரும் குதிரை வீரரும் வாட்படை மறவரும் வேந்தன் வாள்வலியை ஏந்தி ஆர்ப் பரித்தனர். கடலோரமாகச் சென்று, மலேமுதுகு நெளிய