183
கடந்து நீலகிரி மலையில் பாடிவீடு அமைத்துத் தன் பரிவாரங்களுடன் தங்கினான்.
சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற கஞ்சுக முதல்வர் ஆயிரவர், நூற்றுவர் கன்னர் சார்பில் நாடக மகளிர் நூற்றிருவரும், குயிலுவர் இருநூற்றெண்மரும். தொண்ணூற்றாறுவகைப் பாசண்டத் துறைகளிலும் வல்லவரும் நகைவிளைத்து மகிழச் செய்பவருமான வேழம்பர் நூற்றுவரும், நூறு கொடுஞ்சி நெடுந்தேர்களும், ஐந்நூறு களிறுகளும், பதினாயிரம் குதிரைகளும். இன்ன இன்ன சரக்கென்று எழுதப்பெற்று வடபுலச் செலவுக்கு வேண்டிய வடநாட்டுப் பண்டங்கள் ஏற்றப்பட்ட சகடங்கள் இருபதினாயிரமும் செங்குட்டுவனுக்குப் பரிசுப் பொருளாகக் கொண்டுவந்து நின்றனர். மேலும், 'இமயத்தினின்றும் கல் கொணர்ந்து கங்கையாற்றில் நீர்ப்படை செய்து தரவல்லோம்’ என்று தம் மன்னர் சார்பில் தெரிவித்தனர். ஆயினும் செங்குட்டுவன், தமிழரசரை இகழ்ந்த காவாநாவிற் கனக விசயரை வெல்லவும் படை செல்வதால் கங்கையாற்றைக் கடத்தற்கு ஆவன காணுமாறு குறிப்பிட்டனன்:
பால குமரன் மக்கள் மற்றவர்
காவா காவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலராங்கெனச்
கூற்றங் கொண்டிச் சேனை செல்வது
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன
வங்கப் பெருங்றை செய்க தாமென
நூற்றுவர் கன்னர் உதவியுடன் கங்கைப் பேரியாற்றைக் கடந்து அதன் வடகரையை யடைந்த
________________________________________________
8. சிலப்பதிகாரம் : கால்கோட் காதை : 158.165.