பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

184

செங்குட்டுவன அக்காடாளும் கட்பரசரான நூற்றுவர் கன்னர் எதிர்கொண்டு உபசரித்தனர். செங்குட்டுவன் அங்கிருந்தும் சென்று நீர்வளஞ்சான்ற உத்தர தேசத்தை அடைந்து பாசறையில் தங்கினன். தம் நாட்டில் பகை யரசனம் செங்குட்டுவன் படைவீடு கொண்டுள்ளான் என்ற செய்தியைக் கேள்வியுற்ற உத்தரன், விசித்திரன். உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்திரன். சிவேதன் என்ற அனைத்து வடபுல வேந்தர்களையும் துணைக்கொண்ட கனகவிசயரென்ற ஆரியவரசர் “தென் றமிழ் ஆற்றல் காண்குவம் யாமெனப் போர்க்கெழுந்து வந்தனர். வடவாரியர் சேனையைக் கண்ட செங்குட்டுவன் இரைவேட்டெழுந்த அரிமா, யானைப் பெருகிரையைக் கண்டாற்போன்று மனஞ்செருக்கி ஆரவாரித்து அப்படை யுடன் போரிடுவாயிைனன்.

வடவாரிய வேந்தரும் செங்குட்டுவனும் பொரா கின்ற அப்பெரும்போரிலே துகிற் கொடிகளின் பந்தம் களாற் பல்லவனின் ஒளிக்கதிர்கள் மறைப்புண்டன. கொடும்பறைகளும் நீண்ட கொம்புகளும் சங்கங்களும் பேரிசைகளும் கஞ்ச தாளங்களும், மயிர்க்கண் முரசங் களும் எதிரொலி எழுப்பி யொலித்தன. வில்லையும் வேலேயும் கேடயத்தையும் கொண்ட மறவர்களும், யானே குதிரை தேர்வீரர்களும் கலந்தெதிர்த்த அப்போர்க் களத்தில் பூமி தெரியாமலெழுந்த புழுதியானது யானேக் கழுத்திற் கட்டப்பட்ட மணிகளின் காக்குகளிலும் கொடி களிற் கட்டிய சங்குகளின் காக்குகளிலும் புகுந்து அவற்றை ஒலிக்காவண்ணம் செய்துவிட்டன. தூசிப் படைகள் ஒன்றாேடொன்று மோதின. அப்போரிலே தோளுங் தலையுங் துமிந்து வேறுபட்டவரது உடற் கும்பலில் துள்ளியெழுந்தாடிய குறையுடலங்கள் பேரி யினது தாளத்துக் கொப்பக் கூத்தாடின. பிணக் குவிய