பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17



என்று சேரர் ஐயனரிதனர் புறப்பொருள் வெண்பா μο π. &ου μ% σύ தமிழினத்தின் பழமையினையும் வீர மேம்பாட்டினையும் விளங்கக் கூறியுள்ளார்.

  • வழங்குவது உள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பின் தலைப்பிரிதல் இன்று ‘

என்ற குறளின் உரையில், உரையாசிரியர் பரிமேலழகர், தொன்று தொட்டு வருதல்-சேர சோழ பாண்டியர்’ என்றாற்போலப் படைப்புக் காலங் தொடங்கி மேம்பட்டு வருதல்” எனக் கூறியுள்ளார். தமிழின் தொன்னூலா சிரியராம் தொல்காப்பியனர்,

“ ...--------------------- உறுபகை

வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ் போங்தை வேம்பே ஆர்என வருஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் ‘1’

என்று சேர சோழ பாண்டிய மன்னர்களின் அடை யாளப் பூக்களைச் சுட்டிக் கூறியுள்ளமை தமிழினத்தின் பழமையினைப் பரக்கப் பேசும்.

வடமொழியின் முதல் காவியமாகிய வால்மீகி ாரமாயணத்தில் பாண்டிய மன்னன் பாராட்டப்பட் டிரு க் கி ருன்: ‘பின்பு. பொன் நிறைந்ததாயும் அழகுடைத்தாயும் முத்துமணி இவற்றால் அணியப்பட்ட தாயும் நகரத்து அரனேடு இணைக்கப்பட்டதாயும் உள்ள பாண்டியர் வாயிற் கதவை, வானரங்காள், போய்க் տո aծԾrւհի"’ ** என்று இராமன் கிட்கிங்தையிலிருந்த

10. திருக்குறள் - 955. 11. தொல்காப்பியம் : புறத்திணை இயல் : நூற்பா 5

12. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், தமிழ் மொழி வரலாறு, பக்கம், 49.

2