பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

188

ஆற்றல் அறியாது தன்னுடன் மலைந்த ஆரியப் படைகளே

ஒரு பகற்போதுக்குள் அழித்து வெற்றிவாகை குடின்ை செங்குட்டுவன்.

‘ செறிகழல் வேந்தன் தென்றமிழாற்றல் அறியாது மலைந்த ஆரிய மன்னரைச் செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக உயிர்த் தொகை யுண்ட ஒன்பதிற் றிரட்டியென் றியாண்டு மதியும் நாளுங் கடிகையும் ஈண்டுநீர் ஞாலங் கூட்டி எண்கொள வருபெருந் தானே மறக்கள மருங்கின் ஒருபகல் எல்லை உயிர்த்தொகை யுண்ட செங்குட் டுவன்......... 1 1 8

பின்னர்க் கனகவிசயர் முடித்தலையில் கல்லே ஏற்றி வரச் செய்து, கங்கைப் பேராற்றில் ரோட்டித் தூய்மை செய்து, கங்கையைக் கடந்து, நூற்றுவர் கன்னர் அமைத்துத் தந்த அழகிய பாடிவீட்டில் தங்கினன். வடபுலத்து கடந்த போரில் வீரம் மிக்க வினைகள் ஆற்றிய பலருக்கும் பொன்னுலாகிய வாகைப் பூக்களைத் தான் பிறந்த நாளிற் செய்யும் பெருங் கொடையினும் மிகுதியாக கெடும் போதிருந்து வழங்கி மகிழ்ந்தான்.

இவ் வமயத்தில் மாடல மறையோன் ஆண்டு தோன்றி அரசனே வாழ்த்தி,

“. . . . . . . . . . ‘ - . மாதவி மடங்தை

கானற் பாணி கனக விசயர்தம்

முடித்தலை நெரித்தது ‘ என்று கூறினன். பின்னர்ப் புகாரிலும் மதுரையிலும் கடந்த நிகழ்ச்சிகளை விளங்க எடுத்துரைத்தான். மேலும்

8. சிலப்பதிகாரம் : நீர்ப்படைக்காதை :5-13 9. சிலப்பதிகாரம் : நீர்ப்படைக்காதை : 49-52