பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

189

wசங்குட்டுவன் இதற்கு முன்னர் ஆற்றி வாகை குடிய போர்களைப்பற்றியும் சிறப்பித்துப் பேசினன்.

சேரன் செங்குட்டுவன் இளைஞன யிருந்தபோது ஆற்றிய கடம்பர்ப்போர் பதிற்றுப்பத்திலும் அகநானூற் றிலும் விரிவாகப் பேசப்பெற்றாலும் சிலப்பதிகாரத்தில் ‘ கொடும்போர் கடந்து நெடுங்கட லோட்டி’ என்றும் சுட்டப்படுகின்றது.

சோழர் பாண்டியர் உதவியுடன் கொங்கர்கள்

செங்குட்டுவைேடு பொருத போரில் செங்குட்டுவன் வெற்றி

கொண்ட செயல்

நும்போல் வேந்தர் நூம்மோடு இகலிக் கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தன ராயினும் ஆங்கவை திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன’

என வரூஉம் வில்லவன் கோதையின் கூற்றால் விளங்கு கின்றது.

செங்குட்டுவன் கொண்ட பிற களங்களாகச் சிலம்பு இசைக்கும் போர்க்களங்கள் இடும்பில். வியலூர், கொடுகூர் முதலியனவாகும். -

கொடுக்தேர்த் தானையொடு இடும்பில் புறத்திறுத்து’ என்று சிலம்பு குறிப்பிடும் இடும்பில் போரினைப் பதிற்றுப் பத்துப் பதிகம்,

“ மாரு வல்வில் இடும்பில் புறத்திறுத்து என்று குறிப்பிடுகின்றது. வியலூர் வெற்றி,

T10. சிலப்பதிகாரம் : நீர்ப்படைக் காதை : 28, 119

11. சிலப்பதிகாரம் : 28 : 152.155 12. சிலப்பதிகாரம் : 25 : 118

18. பதிற்றுப்பத்து : பதிகம் : 9