பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

18

வானரப்படையினர்க்குச் சொன்னதாக அக்காவியம்

குறிப்பிடுகின்றது. வடநூல்களில் இருக்கு வேதமும் தைத்திரியமும் வியாச பாரதமும் சேர அரசர்களைக் குறிக்கின்றன. அசோகப் பேரரசன் கல்வெட்டுகளும் சேரவேந்தரைப் பற்றிய குறிப்பை வெளியிடுகின்றன.

காலினும் கலத்தினும் பிரிந்து பழந்தழிழர் பொரு விட்டினர். அக்காலத்தே மேலோட்டினராகிய கிரேக்கர், யவனர், பாபிலோனிய காட்டுக் கோசியர்கள் முதலியவர்கள் தமிழகத்தோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். யவனரைப் பற்றிய குறிப்பு தமிழிலக்கியங்களில் பத்து இடங்களில் வந்துள்ளன. ‘ அலெக்சாண்டர் என்னும் பெருவேந்தனுக்குப் பின் செல்யூகஸ் நிகோட்டர் விடுத்த மெகஸ்தனிஸ் என்னும் மேலேகாட்டறிஞர் சந்திரகுப்த மன்னன் அவையில் தங்கியிருந்த ாாளில் தாம் கேள்வியுற்ற செய்திகளைக் குறித்துவைத்தார். அக்குறிப்பினுள் தமிழகத்து மன்னர்களைப் பற்றியும் ஊர்களைப் பற்றியுமான செய்திகள் உள்ளன. எகிப்து காட்டுத் தாலமிகள் தமிழகத்திற்குக் கடல்வழி காண முனைந்தனர். இப்பலாஸ் (Hippalus) என்னும் கிரேக்கன் இக்காட்டில் அடிக்கும் தென்மேற்கு, வடகிழக்குப் பருவக் காற்றின் சிலகண்டு உரைத்தபின் யவன வாணிகம் வளம் பெற நடந்தது. அராபியரும் மேலேக் கரை வழியே தமிழகம் வந்து வாணிகம் செய்தனர். சீன நாட்டுடனும், ஜாவா, சுமத்ரா, மலேயா முதலிய திவுகளோடும் வாணிக உறவு ஓங்கியிருந்தது.

=

13. P. T. Srinivasa Iyenger. History of the Tamils, pp, 29, 3 2. ‘

14. முல்லைப்பாட்டு: 61, 66; தெடுதல்வாடை: 31 . 35; புறம் : 56, 348; பெரும்பாண் : 816; பதிற்றுப்பத்து பதிகம் II: அகம் : 57, 149