பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199

அடியார் பெருமை

  சேக்கிழார் தம் நூலிற்கு இட்ட பெயர் 'திருக்கொண்டர் புராணம்' என்பதாகும். தொண்டர் தம் பெருமையினைப் பரவிப் பாடிய காரணத்தால் இவர் 'தொண்டர்சீர் பரவுவார்’ என்றும் அழைக்கப்பெற்றார். இன்ப துன்பங்களை ஒன்றாக நோக்குபவர்கள் அடியார்கள் ஆவர்."மெய்த்திரு வந்தும்ருலும் வெந்துயர் வர்துற்றாலும் முத்திறருக்கும் உள்ளத்து உரவோர்”¹ அவர்கள். கலக் கெடுகள் அவர்கட்கு ஒன்றே; ஒடும் செம்பொன்னும் முன்றே; இறைவனை வணங்கி ஏத்துதலன்றி வீட்டுப்பேறும் வேண்டி நிற்காத ஆற்றல் மிக்கவர்கள் அடியார்கள்.

"கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர் ஓடும் செம்பொனும் ஒக்கவே கோக்குவார் கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி விடும் வேண்டா விறலின் விளங்கினர்.”

அடியார் போற்றப்படும் முறை

இல்வாழ்வார்க்குரிய கடமைகளாகத் திருவள்ளுவர் அறந்தவர்க்கும் கல்கூர்ந்தார்க்கும், இறந்தார்க்கும் உதவுதலைக் குறிப்பிட்டுள்ளார்.

துறந்தார்க்கும் துவ்வா. தார்க்கும் இறந்தார்க்கும் 'இல்வாழ்வான் என்பான் துணை."’

இம்முறையில் வரும் அடியார்களே இளேயான்குடி மாற நாயனர் எதிர்கொண்டு அழைத்து. கைகூப்பி வணங்கி. இன்சொல் வழங்கி, வீட்டிற்கு அழைத்து வந்து திருவடிகளைத் தூய்மை செய்து, அமர ஆசனமிட்டு _______________________________________________

10. நளவெண்பா 12

20. திருக்கூட்டச் சிறப்பு : 8

21. இருக்குறள் : 42