202
202
களைத் தம் காப்பியத்தின் ஊடே விளக்கியிருக்கக் காண லாம். அநபாய சோழனைக் குறிப்பிடும் பொழுது.
“ மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட் கெலாம்
கண்ணும் ஆவியுமாம் பெருங்கா வலான் ‘’ என்று மண்ணில் வாழும் உயிரினங்களுக்கு அரசன் கண் ளுகவும், உயிராகவும் ஒளிர்கின்றான் என்று போற்றியுள் ளார். மேலும் அரசன் கடமை குடிகளுக்குத் தன்னலும், தன் பரிசனத்தாலும், கள்வராலும், பகைவராலும், எனேய உயிர்களாலும் வரும் ஐவகைப் பயமும் வாராமம் காத்த லாகும் என்று குறிப்பிட்டுள்ளார்:
மாநிலங்கா வலவைான் மன்னுயிர்காக் குங்காலத் தானதனுக் கிடையூறுத ன்ற்ைறன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா லுயிர்தம்மால் ஆனபய மைந்துக்தீர்த் தறங்காப்பா னல்லனே?” இவற்றாலும் “அருமந்த அரசாட்சி அரிதோமற். றெளிதோதான்’ எ ன் று குறிப்பிட்டிருப்பதாலும் அரசியல் அறம் பாடிய அறவோர் சேக்கிழார் என்பதனே’ அறியலாம்.
காவியச் சுவை
பத்திநெறியினைப் பாடவந்த சேக்கிழார் தந்த காப்பியம் காவியச் சுவை நிறைந்து மிளிர்கின்றது. இயற்கை வருணனையும், சொல்லாட்சியும், உவமை அழகும். அணிகலன்களும் ஆங்காங்கே அமைவுறப் பொருந்திக் காவியச் சுவையினைக் கூட்டுவிக்கக் காணலாம். மருத வளத்தை வருணிக்கும் போது வயல் வளம் சூழ்ந்த நாடு ம்ே கண்முன் கிற்கக் காணலாம்.
31. திருநகரச் சிறப்பு : 14
32. திரு நகரச் சிறப்பு : 34 33. திருநகரச் சிறப்பு : 44