பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

204

‘ சைவநெறி ஏழுலகும் பாலிக்குக் தன்மையில்ை

தெய்வநெறிச் சிவம்பெருக்குங் திருவாமூர் திருவாமூர் “ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெரிய புராணமாகிய கலைக்கோயிலின் சிறப்பினைக் கூறிக்கொண்டே போகலாம். கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார்.

‘ கருங்கடலைக் கைநீத்துக் கொளவெளிது; முந்நீர்க்

கடற்கரையி னெய்ம்மணலை யெண்ணியள விடலாம்; பெருங்கடன்மேல் வருக்திரையை யொன்றிரண்டென்

றெண்ணி பிரித்தெழுதிக் கடையிலக்கம் பிரித்துவிட லாகும்; ‘ கருங்கடலின் மீனையள விடலாகும்; வானத்

தாரகையை யளவிடலாஞ் சங்கரன்தா டமது சிரங்கொடிருந் தொண்டர்புராணத்தையள விடாஞ் சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கும் அரிதே.” என்றபடி சேக்கிழார் கட்டிய காவியக் கலைக் கோயிலின் மாண்பினை முற்ற வுணர்த்த இயலாது.

பெரியபுராணச் செய்தி

சிவபிரானிடத்துப் பத்தியும் வழிபாடும், அவன் அடியவரிடத்துப் பத்தியும் வழிபாடும் ஆகிய இவையே மண்ணிற் பிறந்தார் உய்தற்கு உரிய வழிகளாக மேற் கொள்ள வேண்டு மென்று சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்திற் பலவிடங்களில் வற்புறுத்தியுள்ளார். “ மண்ணி னிற்பிறக் தார்பெறும் பயன்மதி சூடும் அண்ண லாரடி யார்தமை யமுதுசெய் வித்தல் கண்ணி லைவர் கல்விழாப் பொலிவுகண் டார்தல் உண்மையாமெனி னுலகர்முன் வருகென வுரைப்பார்.’ மேலும்,

38. திருதாவுக்கரச சுவாமிகள் பு:ாணம் : 1.2 39. திருஞான சம்பந்த நாயனர் புராணம் : 1087